ராஜீவ் குற்றவாளிகள் விடுதலை : மத்திய அரசு மேலும் ஒரு மனு தாக்கல்

high-court-indiaராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த மனு வரும் 27ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு கடந்த வாரம் ஏற்கனவே ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்து.

Tags: , ,

Leave a Reply