மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச ஓமடியாமடு கிராமத்தில் கணபதிப்பிள்ளை யோகநாதன் சடலம்

gana-deadமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் கணபதிப்பிள்ளை யோகநாதன் (வயது 41) என்பவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பாழடைந்த குடிசையில் மேற்படி சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர் 09 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
gana-dead2

Tags: , ,

Leave a Reply