வடக்கு, கிழக்கில் உளள் இராணுவ முகாம்களை பலப்படுத்தும் நோக்கில் இராணுவம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கம், இராணுவத்திற்கு புதிதாக 600 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இராணுவம் தற்போது வைத்துள்ள காணிகளுக்கு மேலதிகமாக இந்த காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பை இரண்டாம் பட்சமாக கருத முடியாது என்பதால், இராணுவத்தின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் இந்த 600 ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.
இராணுவ முகாம்களுக்கு தனியார் காணிகளை சுவிகரிப்பதை கொள்கையளவில் அரசாங்கம் குறைத்து கொண்டுள்ளது. இதற்கு பதிலாக அரச காணிகளை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
















