அரவிந்த் கேஜரிவால் அமெரிக்காவின் உளவாளியா?

aravinthஅரவிந்த் கேஜரிவாலும் மணீஷ் சிசோடியாவும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ ஏஜெண்டுகளா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக டெல்லி பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

அரசியல் கட்சி தொடங்க வேண்டாம் என்ற அண்ணா ஹசாரே அறிவுரையை மீறி அரவிந்த் கேஜரிவால் ஆம்ஆத்மி கட்சியைத் தொடங்கினார். இவ்வாறு அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னணியில் மர்மம் உள்ளது.

அரசியல் கட்சி தொடங்கும் முன்னர், “பரிவர்த்தன்’, “சம்பூர்ண பரிவர்த்தன்’, “கபீர்’ என்ற தொண்டு நிறுவனங்களின் பெயரில் அமெரிக்க ஃபோர்டு ஃபவுண்டேஷனிடமிருந்து லட்சக்கணக்கான டாலர்களை அரவிந்த் கேஜரிவாலும் மணீஷ் சிசோடியும் பெற்றிருந்தனர். ஃபோர்டு ஃபவுண்டேஷன் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ ஆதரவுடன் இயங்கிவருவதும், வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகளில் தொண்டு நிறுவனங்கள் மூலம் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதும், ஆட்சியை சீர்குலைப்பதும் அனைவரும் அறிந்ததே.

இந் நிலையில், அரவிந்த் கேஜரிவாலும் மணீஷ் சிúஸாடியாவும் எந்த வெளிநாட்டுக்காக வேலைபார்த்து வருகின்றனர்? அவர்கள் சிஐஏ ஏஜெண்டுகளா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவின் சிஐஏ அமைப்புக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கே ராமோன் மகசேசே விருதும் வழங்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகளில் அதிகம் தொடர்புடைய காங்கிரஸ் ஆதரவுடன் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி 49 நாள்கள் ஆட்சி நடத்தியது.

இதன் மூலம் தில்லிவாசிகளுக்கு அரவிந்த் கேஜரிவால் துரோகம் இழைக்கவில்லையா? அரசு அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்தை அறிந்த ஆம்ஆத்மி, ஆட்சியிலிருந்து விலகுவது குறித்து ஏன் கருத்து கேட்கவில்லை?அரவிந்த் கேஜரிவால் அளித்த பொய்யான வாக்குறுதிகளால் தில்லிவாசிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம் அதிகரித்துள்ளது.

மின்சாரக் கட்டணம் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு மூன்று மடங்கு உயர்த்தப்படவுள்ளது.

பெண்களுக்குப் பாதுகாப்பு, மொஹல்லா சபா, தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம், குடிநீர் விநியோகம், அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துதல், குடிசைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், 3 லட்சம் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்குதல், விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்கள், புதிதாக 500 பள்ளிகள் திறத்தல், புது மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் வாக்குறுதிகள் பொய்த்துவிட்டன.

டெல்லி போன்ற சிறிய பிரதேசத்தை ஆட்சி செய்ய இயலாதவர்கள், நாட்டை எப்படி ஆட்சி செய்ய முடியும்? நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆம்ஆத்மியின் கொள்கைகள் ஆபத்தானவை.

அரவிந்த் கேஜரிவாலும் மணீஷ் சிசோடியாவும் வெளிநாட்டிலிருந்து பெற்ற நிதி குறித்து பதில் அளிக்க மறுத்து வருகின்றனர் என்றார் ஹர்ஷ் வர்தன்.

Tags: , ,

Leave a Reply