உத்திரப்பிரதேசத்தில் ஏழு புதிய விமான நிலையங்கள்

lion-airமாநிலங்களின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பிராந்திய அல்லது தொலைதூரப் பகுதிகளில் செயல்படும் விமான இணைப்புகளும் உந்துதலாக இருக்கமுடியும் என்று மத்திய அரசு எண்ணுகின்றது.
இதனைத் தொடர்ந்து மாநில அரசின் கீழ்வரும் நிலையங்கள் உட்பட நாட்டில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விமான நிலையங்களை மேம்படுத்தும் பணியில் அரசு இறங்கியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக உத்திரப்பிரதேச மாநில அரசு இந்திய விமான நிலைய ஆணையத்துடன் ஒரு புரிதல் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் அந்த மாநில அரசின் கீழ்வரும் மீரட், மொராதாபாத், பைசாபாத் போன்ற விமான நிலையங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் வசம் அளிக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி அந்த மாநிலத்தில் ஆக்ரா, அலகாபாத், பரேலி மற்றும் கான்பூர் போன்ற இடங்களில் உருவாக்கப்படவுள்ள புதிய விமான நிலையங்களுக்குத் தேவையான இடம் மற்றும் அனைத்து உதவிகளையும் அளிக்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் நிறைவேறும்போது உத்தரப்பிரதேசத்தில் ஏழு விமான நிலையங்கள் செயல்படத் துவங்கும் என்றும் அவை மாநில வளர்ச்சிக்கு உதவும் விதமாக இருக்கும் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply