கல்குடா கல்வி வலயத்தில் உள்ள மீறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்றது.


வித்தியாலய அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.குணலிங்கம்; கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கல்குடா கல்வி வலயத்தின் உடற் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுபாஸ்சந்திரன், கிழக்கு பல்கலைக் கழக மருத்துவபீட போதனாசிரியர் எஸ்.கபில்தேவ், வண்ணாத்துப்பூச்சி சிறுவர் பூங்கா திட்டமிடல் முகாமையாளர் ரீ.நகுலேஸ்வரன், மீறாவோடை கிராம அதிகாரி க.காந்தன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இப் போட்டி நிகழ்ச்சிகளில் வைகை (பச்சை) இல்லம் 327 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், காவேரி (மஞ்சள்) இல்லம் 322 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும்; பெற்றுக் கொண்டது.
















