நவியின் அறிக்கையில் உதயன் மீதான தாக்குதல்

uthayan
இலங்கையில் நடைபெற்று முடிந்த போரின் இறுதி நாள்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவா மனித உரிமைகள் சபைக்கு நேற்றுமுன்தினம் வழங்கியுள்ள 24 பக்கங்களைக் கொண்ட அறிக்கையின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையின் முக்கியமான பரிந்துரையில், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங் கள் மீறப்பட்டதான இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, மேற்கொண்டும் புலனாய்வுகளை மேற்கொள்வதற்குச் சர்வதேச விசாரணை பொறி அமைப்பு ஒன்றை நிறு வுமாறு வலியுறுத்தி உள்ளார். இலங்கை அரசு நிறை வேற்றும் வகையில் 12 அம் சங்களைக் கொண்ட இன்னொரு பரிந்துரையும் அதில் அடங்கியுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு வழங்கியுள்ள பரிந்துரை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு விடயங்களில், யாழ்ப்பாணத்தில் “உதயன்’ பத்திரிகை மீது நடத்தப் பட்ட தாக்குதல்கள் பற்றியும், சண்டே லீடர் இணை ஆசிரியர் தாக்கப்பட்டமை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பத்திரிகையாளர்கள் மீதும் ஊடக வெளியீட்டகங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் 2013 ஆம் ஆண்டிலும் தொடர்ந் துள்ளன. தமிழ் நாளிதழான “உதயன்’ மீது பல சமயங்களில் குறிவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் திகதி இரண்டு விநியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகை பிரதிகள் எரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 13 ஆம் திகதி ஆயுதம் தரித்த நபர்கள் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் அதன் பணிமனையில் உள்ள பிரதான அச்சு இயந்திரங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.

“”சண்டே லீடர்” ஊடகவியலாளர் மீதான தாக்குதல்
ஓகஸ்ட் 24 ஆம் திகதி “சண்டே லீடர்’ பத்திரிகையின் இணை ஆசிரியர் அவரது வீட்டில் வைத்து முகமூடிதாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது வீடு உடைக்கப்பட்டுச் செப்ரெம்பர் 8 ஆம் திகதி அவருடைய கணினி திருடப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூறல் மற்றும் நம்பகமான விசாரணைகளை மேற்கொள்வதில் அரசு தவறி விட்டமை குறித்து குறிப்பிட் டுள்ள ஆணையாளர் பல தடவைகளில் ஆணையாளரா லும் மனித உரிமை நிறுவனங்களினாலும் மனித உரிமை ஆணைக்குழுவின் கவனம் இந்த விடயத்தில் திருப்பப்பட்ட துண்டு. இவைகளில் பலவும் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல குறித்தும் முன்னைய விசாரணைக் குழுக்களில் ஆராயப்பட்டுள்ளன. மேலும் இது விடயத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண் டும் என்று நிபுணர் குழுவும் பரிந்துரைத்திருந்தது. பல விடயங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை அரசு, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மீண்டும் மீண்டும் அறிவித்திருந்தது. எதுவானாலும் இந்தச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் எவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டதாகக் காணப்படவில்லை.

இவை அங்கு – அரசினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஒரு சிறு உதாரணங்கள் மட்டுமே. இவைகள் மேலும் ஆராயப்பட்டு தீர்க்கப்படவேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply