மொவாசாம் பெ(டி)க், பிரித்தானியப் பொலிசாரால் கைது!

movasam pedik´´குவான்ரனமோ´´ சிறையில் வழக்குகளேதும் தாக்கல் செய்யப்படாது, வெறும் சந்தேகத்தின் பேரில் மூன்று வருடங்கள் துன்பங்களை அனுபவித்த மொவாசாம் பெ(டி)க், இங்கிலாந்துப் பொலிசாரால் சிரியா வன்முறையோடு தொடர்பிருக்கலாமெனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல் கய்டாவின் ஒரு இயங்கும் அங்கத்தவராக இருக்கக் கூடுமெனும் சந்தேகத்தில் 2002 இல் அமெரிக்க உளவுப் படையினரால் பாகிஸ்தானில் வைத்துக் கைது செய்யப்பட்டார் பெக் என்பது குறிப்பிடத்தக்கது ஜனவரி 2005ல் இல் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் CIA யும் FBI யும் இவர் ஆபத்தானவரெனும் சந்தேகப் பார்வையைத் தொடர்ந்து வைத்திருந்தது.

சிறைச்சாலையில் தவறாக நடாத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என, இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற் கெதிராகத் தொடரப்பட்ட வழக்கு இரு பக்க ஒருமைப்பாட்டின் பேரில் பெருந்தொகை நஷ்ட ஈட்டை இவருக்குப் பெற்றுத்தந்தது.

முன்னைய கைதியான இவர் இங்கிலாந்தின் தொலைக்காட்சிகளில் தோண்றி, முஸ்லீம் மக்கள் அங்கு நடாத்தப்படும் முறையில் தவறுள்ளதாகக் கூறிவந்தமையும், அதனால் பிரபல்யமானதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய கைதுச் சம்பவத்திற்கு, இவரது சிரியா நாட்டுப் பயனம் காரணமாக அமைந்ததென்றும், சிரியாவிலிடம்பெற்ற வன்முறைகளோடு இவரது அப்பயணங்கள் தொடர்பு கொண்டிருக்கலாமெனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டாரென்றும், வழக்குகள் எவையும் இவர் மீது தொடுக்கப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவரது சிரியாப் பயணத்தை நிறுத்துமாறு பிரிட்டிஷ் பொலிஸ் பலமுறை எச்சரித்தும் அதனை இவர் அலட்சியம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்திற்குரிய போராளிகள், மக்கள் போராட்டம் இடம் பெறும் நாடுகளுக்குப் பயணம் செய்வதை சகல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் உளவுத்துறைகளும் விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவில் இடம்பெறும் கொடூரத்தை தெரிந்துகொள்ள நினைத்தால், அதன் சகோதர நாட்டின் சரித்திரத்தைப் படிப்பதால் வரும் கண்ணீரை வடித்துப்பாருங்கள் உண்மைகள் புரியுமென்பது இவர் இறுதியாக வுறநநவநச இல் வெளியிட்ட தகவலாகும்.

Tags: ,

Leave a Reply