தலை துண்டித்து 3 பேர் படுகொலை

murderஉத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகரின் ரயில் தண்டவாளம் அருகே கிடந்த 3 தலை துண்டிக்கப்பட்ட பிரேதங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இந்த 3பேரும் உத்தரபிரதேசத்தின் பரத்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது அவர்களை கொன்ற ஒரு கும்பல் தலையை துண்டித்து பிரேதங்களை ரயில் தண்டவாளம் அருகே வீசிவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.

ராஜஸ்தான் மாநில பொலிஸ் துறையில் ஆட்களை நியமிக்கும் தரகர்களாக செயல்பட்டு வந்த இவர்களை வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்த நபர்களில் யாரேனும் கொன்றிருக்க கூடும் என கருதும் பொலிஸார் இந்த படுகொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply