சமூக சேவைகள் அமைச்சினால் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

Eye-glass2சமூக சேவைகள் அமைச்சினால் பார்வை குறைவடைந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச கண் பரிசோதனை இடம்பெற்று அவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகம் தோறும் இடம்பெற்று வருகின்றது.
Eye-glass1
இவ்வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிராமிய அமைப்பாளர் எஸ்.எம்.றம்ளார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், சமூக சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான எஸ்.ஏ.றபீல், மட்டக்களப்பு மாவட்டச் செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.செல்வநாயகம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டு மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தனர்.

Tags: ,

Leave a Reply