இலங்கை குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் என்பதில் நம்பிக்கை கிடையாது என பிரித்தானியா அறிவித்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள், காணாமல் போனதல்கள் தொடர்பான விசாரணைகள் போன்றன தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணைக்ள நடத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்த நிறைவின் பின்னர் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானியா பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எதிர்வர் மார்ச் மாதமளவில் நம்பகமான விசாரணைகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக விசாரணைகளுக்கு அழுத்தம்; கொடுக்க பிரித்தானியா முனைப்பு காட்டும் என குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதனை ஏனைய நாடுகளுடன் இணைந்து வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
















