நளினி உள்பட 4 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

rajiv merdarராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி உள்பட 4 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்ய ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நளினி, ஜெயக்குமார்,ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரையும் விடுவிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், நளினி உள்பட 4 பேரின் விடுதலையை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், கருத்து கேட்ட பின்பும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நளினி உள்பட பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்ததோடு, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கும் வரை விடுவிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும், பேரறிவாளன் உள்பட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: , , ,

Leave a Reply