பிரிவுக்குக் காரணம் ஹன்சிகாவின் கள்ளக்காதல்..! – லவ் பிரேக் அப் பற்றி சிம்பு சொல்லும் கதை உண்மையா?

simbu-hansihaசிம்புவின் காதல்களையும், காதல் பிரிவுகளையும் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புரியும்.

உருகி உருகி காதலிக்கும் சிம்பு, காதல் முறிந்த பிறகு உக்கிரமாக மாறிவிடுகிறார்.

காதலித்த பெண்ணைப் பற்றியும், காதலித்தக் காலத்தில் அப்பெண்ணுக்கும் தனக்குமான அந்தரங்க விஷயங்கள், பரிமாற்றம் பற்றி பிறரிடம் பேசாதிருப்பதே பேராண்மை. அதுவே அந்த காதலிக்கும், காதலுக்கும் செய்யும் மரியாதை.

எந்தக்காலத்திலும் சிம்புவிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.

பிரபல நடிகரின் மகளை சிம்பு காதலித்ததாகவும், பிறகு அந்த காதல் பிரேக் அப் ஆனதாகவும் பல வருடங்களுக்கு திரையுலகில் ஒரு பேச்சு இருந்தது. அது உண்மைதான் என பின்னாட்களில் உறுதியானது. காரணம்…இணையத்திலும், செல்போன் வழியாகவும் உலா வந்த ஒரு தொலைபேசி உரையாடல்.

அந்த உரையாடலில் சிம்புவும், பிரபல நடிகரின் மகளும் காரசாரமாக உரையாடுகிறார்கள். பின்னர் அப்பெண்ணின் அம்மா, அதாவது பிரபல நடிகரின் மனைவி சிம்புவிடம் பேசுகிறார்.

மிக அந்தரங்கமான இந்த உரையாடல் வெளியே வந்தது எப்படி?

யார் இதை பதிவு செய்தார்கள்?

யார் இதை இணையத்திலும், செல்போன் வழியாகவும் பரப்பினார்கள்?

பிறகு நயன்தாரா உடன் காதல்வயப்பட்டார் சிம்பு.

நயன்தாரா தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் இரவு பகலாக இருவரும் கூத்தடித்தார்கள்.

அப்போது வல்லவன் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தனர் – இருவரும். படப்பிடிப்பு நடக்கும்போது கேரவானுக்குள் புகுந்து கொண்டு கொட்டம் அடித்தனர்.

சில மாதங்களில் நயன்தாரா சிம்புவை வெட்டிவிட்டார்.

வழக்கம்போல் உக்கிரமானார் சிம்பு.

சில நாட்களில், நயன்தாரா உடன் சிம்பு உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படங்களில் நயன்தாராவின் உதட்டை கவ்விக்கொண்டிருந்தார் சிம்பு.

கவனிக்க…இந்தப் புகைப்படங்கள் நயன்தாராவும் சிம்புவும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இந்த புகைப்படங்கள் வெளியே வந்தது எப்படி?

யார் இதை எடுத்தார்கள்?

யார் இதை மீடியாவுக்குக் கொடுத்தார்கள்?

பிரபல நடிகரின் மகளுடனும், நயன்தாரா உடனும் காதல் பிரிவு ஏற்பட்டபோது அந்தரங்கமான விஷயங்கள் எப்படி வெளியே விடப்பட்டதோ, அதுபோலவே இதோ…இப்போதும் ஹன்சிகா உடனான காதல் முடிவுக்கு வந்துவிட்டநிலையில்…

சிம்பு – ஹன்சிகா காதல் முறிந்துபோனதற்கான காரணம் என்று, ஹன்சிகா பற்றிய ஒரு பகீர் தகவலை படு வேகமாக படத்துறையில் பரப்பி வருகிறார்கள்.

என்ன தகவல்?

நடிகை ஜெயபிரதாவின் மகன் சித்தார்த் உடன் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

உயிரே உயிரே என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது சித்தார்த் உடன் நெருக்கமாகிவிட்டாராம் ஹன்சிகா.

சில மாதங்களுக்கு முன் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஹன்சிகாவும் சித்தார்த்தும் ஒரே அறையில் தங்கியதாகவும் சிம்புவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, சித்தார்த் உடன் ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய ஹன்சிகா ஒருகட்டத்தில் சிம்புவைவிட சித்தார்த் பெட்டர் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

சிம்புவை உதறிவிட்டு சித்தார்த்தை காதலிப்பதாக ஹன்சிகா எடுத்த முடிவுக்கு அவரது அம்மாவின் ஆதரவும் கிடைக்க…

அதன் பிறகு சிம்புவிடமிருந்து விலக ஆரம்பித்திருக்கிறார் ஹன்சிகா.

அதனால் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் தகராறு நடந்தபடியே இருந்திருக்கிறது.

இன்னொரு பக்கம், சித்தார்த் உடனான நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வந்திருக்கிறது.

தன்னை காதலித்துக் கொண்டே இன்னொரு பக்கம் சித்தார்த் உடன் ஹன்சிகா கள்ளக்காதல் செய்ததை சிம்புவினால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லையாம்.

எனவேதான் லவ் பிரேக் அப் என்ற அறிவிப்பை வெளியிட்டாராம் சிம்பு.

இந்த தகவல்கள் உண்மையா?

அல்லது வழக்கம்போல் தன்னைவிட்டுப் பிரிந்த காதலிகளை அசிங்கப்படுத்த சிம்பு செய்யும் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா?

காத்திருங்கள்..புதிய தகவலுக்கு!

Tags: , ,

Leave a Reply