காணாமல் போனோர் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கை கண்துடைப்பு

tnfp-meetingகாணாமல் போனோர் தொடர்பில் மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கை கண்துடைப்பு நடவடிக்கை என்று சுட்டிக்காட்டியதுடன் அதனை நிராகரிப்பதாகவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தினில் நேற்று நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இவ்விடயத்தினை கவனத்திற்கு கொண்டுசென்றார்.

அவ்வாணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் தமது அதிர்ப்தியினையும் அவர் வெளியிட்டிருந்தார். ஒருபுறம் கிளிநொச்சியில் குறித்த ஆணைக்குழு வாக்குமூலங்களை பதிவு செய்ய மறுபுறம் நாமல்ராஜபக்ஸ தனது குழுவைக் கொண்டு காணாமல் போனவர்களிற்கு மரண சான்றிதழ் வழங்க முற்பட்டிருந்தார். இதன் மூலம் குறித்த விசாரணைக்குழு போலியாக சர்வதேசத்தினை ஏமாற்ற அமைக்கப்பட்டுள்ளதென்பது அம்பலமாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சக வடமாகாணசபை உறுப்பினர்கள் இவ்விவகாரத்தினை பற்றி தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நிராகரிப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Tags: , , ,

Leave a Reply