அமெரிக்க சூழ்ச்சித் திட்டத்தின் ஓரு கட்டமே ஐ.தே.கவின் நம்பிக்கையில்லா தீர்மானம் – வாசுதேவ

vasudeva_nanayakkaraஅமெரிக்க சூழ்ச்சித் திட்டத்தின் ஓர் கட்டமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கையில்லா தீhமானத்தை கருத வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரங்களில் அமெரிக்காவினை தலையீடு செய்ய வைக்கும் நோக்கில் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துக் கொண்டுள்ள காலம் மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க அரசாங்கம் ஏதேனும் ஓர் காரணத்தின் அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்ய முயற்சித்து வருவதகாத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக செயற்படுவோர் தொடர்பில் அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அல்லது பாதக விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா மனித உரிமை என்ற பெயரில் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply