தமிழரின் நிலங்கள் அடாத்தாகப் பறிப்பு; கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரிப்பு என்கிறது கூட்டமைப்பு

TNA-logoபோருக்குப் பின்னர் நாளுக்கு நாள் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் எமது கைகளில் இருந்து பலாத்காரமாக பறிக்கப்படுகின்றன. வெறுமனே அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளைத் திருத்துவதாலோ, புனரமைப்பு செய்வதாலோ, மக்களுக்கான உண்மையான அபிவிருத்தியைக் காண முடியாது. மாறாக அவர்களது அவசியம் தேவைகளை அறிந்து செயற்பட்டு அவர்களை வாழ் வாதாரத்துக்கு ஏற்றாற் போல் மாற்றுவதே உண்மையான அபிவிருத்தியாகும். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். தங்கவேலாயுதபுரம் விநாயகர் ஆலய அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக் கான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். அவர்களினது இடப்பெயர்வு எமது தாயகத்தைப் பொறுத்த வரையில் அன்றிருந்து இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. எமது நிலம் பறிபோகுமாக இருந்தால் கலாசாரம், ஒழுக்க விழுமியங்களும் பறிபோய், எமது சமூகம் ஏனைய கலாசா ரத்தில் மூழ்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையும் உருவாகிவிடும். அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எமது நீண்ட நாள் இலக்கை அடைவதற்குப் பாடுபட வேண்டும். தமிழர் கலாசாரத்தை இல்லாமல் செய்து தமிழ்த் தேசி யத்தை சிதறடித்து மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களையும் அப கரிக்கும் நோக்கோடு எம்மிடையே பலர் திட்டம் தீட்டிச் செயற்படுவதைக் காண முடிகின்றது. இவர்களது திட்டமிட்ட செயற்பாடுகளால் எதிர்காலச் சமூகத்தில் பல பின்னடைவுகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கொள்கையில் இருந்து சற்றும் விலகிச்செயற்பட முனை யாது. அந்தக் கொள்கையில் இருந்து கொண்டுதான் எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலும் என்பதில் யாருக்கும் சந்தேகமும் இருக் கக் கூடாது. அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் போரால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் இன்றும் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி தங்களது வாழ்க்கையை நிம்மதி அற்ற நிலையில் வாழ்ந்து கொண் டிருக்கின்றார்கள். இலங்கையிலே 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிரந்தர சமாதானம் நிலவுவதாக இந்த நாட்டு அரசு பெயரளவில் கூறி னாலும், தமிழர்களைப் பொறுத்த வரையில் இவர்கள் கூறும் சமாதானம் போலியான சமாதானமாகவே தற்போதும் இருந்து வருகின்றது. வடக்கு,கிழக்கு மாகாணத் தைப் பொறுத்த வரையில் இன்றும் தங்களது சொந்த இடத்துக்குச் சென்று மீளக் குடியேறி வாழ முடியாத அளவிலேயே எம்மினம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்று எமது பிரச்சினை உலகம் முழுவதற்குமே வியா பித்து இருக்கின்றது. இதற்கு பங்களிப்புச் செய்பவர்கள் புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது உறவுகள். இவர்களின் அயராத முயற் சியும், எமது தமிழ்த் தேசியத் தலைமைகளின் ஓயாத பங் களிப்பும் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன.-என்றார்.

Tags: , , ,

Leave a Reply