ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் ஆஜராக தாய்லாந்து பிரதமருக்கு உத்தரவு

yingluck-shinawatra-thailandதாய்­லாந்து பிர­தமர் யின்லக் ஷின­வட்­ரா­வுக்கு அர­சாங்க அரிசி உதவி திட்டம் ஒன்று சம்­பந்­த­மாக அலட்­சி­யத்­துடன் செயற்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்­பான விசா­ர­ணையில் ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்க அந்­நாட்டு ஊழ­லுக்கு எதி­ரான அமைப்­பொன்று உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேற்­படி அரிசி உதவி வழங்கல் திட்­டத்தில் கடும் ஊழல் இடம்­பெற்­றுள்­ள­தான யின்லக் ஷின­வட்­ராவின் எதி­ரா­ளிகள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

அவர் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டும்­பட்­சத்தில், அவர் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வ­துடன் அர­சி­யலில் பங்­கேற்ற 5 வருட கால தடை­யையும் எதிர்­கொள்ள நேரிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த புதன்­கி­ழமை தலை­ந­க­ரி­லி­ருந்து வட­ந­க­ரான சியாங் ராய்க்கு சென்­றுள்ள யின்லக் ஷின­வட்ரா, தேசிய ஊழ­லுக்கு எதி­ரான ஆணை­ய­கத்தில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில் ஆஜ­ரா­க­மாட்டார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அவ­ருக்கு பதி­லாக அவ­ரது சட்­டத்­த­ரணி விசா­ர­ணை­களில் ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்­கலாம் என தேசிய ஊழ­லுக்கு எதி­ரான ஆணை­யகம் குறிப்­பிட்­டுள்­ளது.
தனக்கு எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள பிர­தமர், எனினும் உண்­மையை வெளிக்­கொ­ணரும் முக­மாக மேற்­படி ஆணை­ய­கத்தின் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வுள்­ள­தாக கூறினார்.

யின்­லக்கின் அர­சாங்­கத்தின் முக்­கிய கொள்­கை­களில் ஒன்­றாக விளங்கும் அரிசி உதவி திட்டம் உலக விலை­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் 50 மடங்கு அதி­க­மான விலைக்கு விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து அரி­சியை அர­சாங்கம் கொள்­வ­னவு செய்ய வழி­வகை செய்­கி­றது.

விவ­சா­யிகள் மத்­தியில் ஆரம்­பத்தில் பிர­ப­லம்­பெற்ற இந்தத் திட்டம் தாய்­லாந்தின் அரிசி ஏற்­று­ம­தியை கடு­மை­யாக பாதித்து குறைந்­தது 4.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான இழப்­பீட்­டுக்கு வழி­வகை செய்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக விவ­சா­யிகள் பாதிப்பை எதிர்­கொள்ள நேர்ந்­தது.

இந்­நி­லையில் மேற்­படி கொள்கை உரு­வாக்கம் மட்­டுமே தனது எனக்­கூ­றிய யின்லக், அந்த திட்­டத்தின் நாளாந்த அமு­லாக்­கத்­திற்கு தான் பொறுப்­பாக இருக்­க­வில்லை என்று தெரி­வித்­துள்ளார்.

தாய்­லாந்தில் கடந்த சில வாரங்­க­ளாக அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்ற நிலை­யி­லேயே யின்லக் மீதான புதிய குற்­றச்­சாட்டு விசா­ரணை தொடர்­பான உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பாங்கொக்கில் கடந்த வாரம் இடம்பெற்ற வெவ்வேறு வன்முறை தாக்குதல்களில் 4 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

அங்கு கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி முதல் இடம்பெற்ற வன்முறைகளில் இதுவரை குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply