இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்

humanrightsஇலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறிந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் இலங்கை அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறைமைகள் தோல்வியைத் தழுவியுள்ளதாக நவனீதம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார்.

படையினர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடாத்த அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக பிரட் அடம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply