‘உதயன்’ மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களைப் பட்டியல் படுத்தியுள்ள அமெரிக்கா, தாக்குதல் சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப டாமை தொடர்பில் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது.
54 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் ஊடக சுதந்திரம் தொடர்பில் 24 ஆம் பக்கத்திலிருந்து 29 ஆம் பக்கம் வரை பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்படுள்ளன.
இதில் 26 ஆம், 27 ஆம் பக் கங்களில் “உதயன்’ மீதான தாக்குதல்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உதயன் ஆசிரியர் மீதான தாக்குதல், உதயன் நிர்வாக இயக்குநரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனின் வாகனம் மீதான தாக்குதல், 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உதயன் விநியோக ஊழியர் மீதான தாக்குதல், அதன் பின்னர் உதயன் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் என்பனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரதானமாக உதயன் கிளி நொச்சி பிராந்திய அலுவலகம் மீதான தாக்குதல் மற்றும் உதயன் தலைமை அலுவல கத்தின் மீது தாக்குதல் நடத் தப்பட்டு அச்சகம் தீயிட்டு எரிக்கப்பட்டமை என்பனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 2011 ஆம் ஆண்டு உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீதே இன்னமும் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் அமெரிக்கா தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
















