சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் நவநீதம்பிள்ளையை சந்திக்கவுள்ளார்

navanethem-pillay2சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 25வது அமர்வுக்கு புறம்பாக இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என்று நவநீதம்பிள்ளை அண்மையில் வெளியிட்ட அறிக்கை குறித்து பேசப்படவுள்ளது.

ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே ஜெனீவாவுக்கு செல்லவுள்ளது. இதேவேளை நாளை ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோரின் முக்கிய உரைகள் இடம்பெறவுள்ளதாக ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: ,

Leave a Reply