கடந்த காலத்தில் நடந்த பாரிய குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்படாமல்,
இலங்கையில் உண்மையான நல்லிணக்கம், நீடித்த சமாதானம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று பிரிட் டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோ ஸுவைர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால், இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். அவரது அறிக்கையில், இலங்கை மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலில் முன்னேற்றம் காட்டாமை தொடர்பில் அவர் தனது கவலைகளைப் நவநீதம்பிள்ளையின் அறிக்கை தொடர்பிலும், அதற்குப் பதிலளித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பிலும் நாங்கள் ஆராய்கின்றோம்.
சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான சட்டங்கள் கடந்த காலத்தில் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை சுதந்திரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான விசாரணை நடத்தத் தவறியதை, நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று தெரிவித்த ஸுவைர், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையைப் பிரிட்டன் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் தற்போதுள்ள தனது நிலையைப் பயன்படுத்திச் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை விடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைத்தல், கண்ணிவெடி அகற்றல், சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு போன்ற இலங்கை அரசின் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம்.
எது எப்படியிருந்த போதிலும், கடந்த காலத்தில் நடந்தேறிய குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத் தப்படாமல் உண்மையான நல்லிணக்கம், நீடித்த சமா தானம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று தீர்க்கமாக பிரிட்டன் நம்புகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















