விடுதலைப் புலிகள் போரில் வெல்ல முடியாத படைகளைக் கொண்டவர்கள். ஆனால் இலங்கை அரசுக்குப் படைகளையும், ஆயுதங்களையும் வழங்கி, திட்டங்களையும் இந்தியா வகுத்துக் கொடுத்ததால்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்றனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இலங்கை அரசுக்கு எந்த வகையிலும் ஆயுதம் தரமாட்டோம் என்று உறுதியாக முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்திலேயே இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அப்படித் தமிழர்களுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் ஈழத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்றே ஈழத் தமிழர்கள் விரும்புகின்றனர். சுதந்திர ஈழமே எங்களின் இலக்கு. அதற்கான சூழல் கனிந்து வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் இல்லை என்று இத்தாலி நீதிமன்றம் கூறியுள்ளது.
அதைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் விடுதலைப் புலிககள் மீதான தடை நீங்கும். இந்தியாவிலும் விடுதலைப் புலிகளான தடை நீங்கும். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, அமையப் போகும் பா.ஜ.க ஆட்சியில் அந்தச் சூழல் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















