ஜெனீவா விவகாரம் குறித்த தகவல்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்த தகவல்கள் மக்களுக்கு வெளியிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலரி மாளிகையினால் மட்டும் ஜெனீவா பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைச் சமூகத்தின் பல்வேறு மட்டத்தினருடனும் பேச்சுவார்த்தை நடாத்தி அதன் மூலம் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை எட்ட முயற்சிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவா பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முனைப்புக்களில் அனைவரையும் அரசாங்கம் இணைத்துக் கொள்ளாமை பாரிய தவறாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்க நிறைவேற்ற உள்ள தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் பணிகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக செய்ய வேண்டிய பணிகளை வெளிவிவகார அமைச்சு நேர்த்தியாக செய்து முடிக்கத் தவறியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சில இடதுசாரி கட்சி அமைச்சர்கள் மேற்குலக நாடுகளின் ஒப்பந்தங்களை நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
















