ஜெனீவா அமர்வுகள் தொடர்பில் முன்வைத்த தமது பரிந்துரைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஆறு அமைச்சர்கள் கூட்டாக இணைந்து ஜெனீவா அமர்வுகள் குறித்து ஜனாதிபதிக்கு சில பரிந்துரைகளை செய்திருந்தனர்.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ரெஜினோல்ட் குரே, ராஜித சேனாரட்ன, டியூ. குணசேகர மற்றும் திஸ்ஸ வித்தாரண மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரினால் சில பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக அமெரிக்க ஆதரவு தீhமானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகளை எவ்வாறு எதிர்நோக்குவது என்பது குறித்து இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
சட்ட சிக்கல்கள் மற்றும் பொருளாதார சிக்கல்களை ஆராய்வதற்கு இரண்டு ஆணைக்குழுக்களை உடனடியாக நியமித்து ஆராயுமாறு அமைச்சர்கள் கோரியிருந்தனர்.
எனினும். இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறந்தள்ளி விட்டதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
















