மீனவர் பிரச்சினையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பு நகரில், 13 ஆம் திகதி (வியாழக்கிழமை) நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.
அதற்கு முன்பு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















