அட்மிரல் ரவீந்திர மீது நடவடிக்கை – காவல்துறை மா அதிபருக்கு பரிந்துரை

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ஆர்.பி.செனிவிரத்ன, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கோரியுள்ளார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட முக்கியமான பல வழக்குகளை விசாரித்து வரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும், அந்தச் குற்றச்சாட்டு பொய்யானது என்று காவல்துறை மா அதிபருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை அளித்திருந்தனர்.

இந்தநிலையில், முக்கியமான விசாரணை அதிகாரி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, விசாரணைகளில் தலையீடு செய்ய முயன்ற, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் செனிவிரத்ன, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு எழுத்து மூலம் பரிந்துரைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!