மோடியை பிரதமராக்குவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, உத்தரபிரதேசத்தில் மோடி அலை வீசவில்லை. நாங்கள் டெல்லியில் 28 இடங்களில் வெற்றி பெற்றதற்கு மக்களிடம் இருந்த காங்கிரஸ் மீதான கோபமே காரணம்.
நாட்டில் உள்ள அனைத்து எரிவாயு வளங்களையும், முகேஷ் அம்பானிக்கு பா.ஜ.க. விற்று விட்டது. அதையே காங்கிரசும் செய்துவருகிறது.
மோடியும், ராகுலும் முகேஷ் அம்பானியின் ஏஜண்டுகள்தான்.பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.
மன்மோகன்சிங்கை அகற்றிவிட்டு, மோடியை பிரதமராக்குவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நான் உங்களிடம் ஓட்டு கேட்க வரவில்லை, ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே கூறுகிறேன் என கூறினார்.
















