ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிராக தமிழரை திரட்டி பேரணி நடத்தச் சிலர் சூழ்ச்சி – கூட்டமைப்பு

TNA-logoஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிராக தமிழ் மக்களை ஒன்றிணைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி பேரணி ஒன்றை நடத்துவதற்கு சில குழுக்கள் திட்டம் தீட்டியுள்ளன. இந்தச் சதிவலையில் தமிழர்கள் சிக்க வேண்டாம் என்று கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையை அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன், மு.இராஜேஸ்வரன் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அ.அமிர்தலிங்கம், அ.விஜயரெட்ணம், வி.கமலநாதன், சி.ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எதிர்வரும் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டப் பேரணியை தமிழர்களை கொண்டு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதில் தமிழ் மக்களைக் கலந்து கொள்ள வைப்பதற்காக வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களையும், மகளிர் சங்கங்களையும் மற்றும் அப்பாவித் தமிழ் மக்களையும் அழைக்கும் பொருட்டு ஆங்காங்கே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு நாம் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஒரு பேரணியை நடத்த வேண்டுமெனவும் இதில் கலந்து கொள்ளாதவர்களுக்கு அரச உதவி எதையும் பெற முடியாது எனவும் எச்சரிக்கைத் தொனியுடன் பேசி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முறை கொண்டுவரப்படவுள்ள ஜெனிவாத் தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் உடையது என்று ஆய்வாளர்களும் ஊடகங்களும் வெளிப்படுத் திக்கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களைச் செய்வதன் உள்நோக்கம் என்ன என்பதனை உண்மையான தமிழன் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஜெனிவா தீர்மானம் நிறை வேறவுள்ள இந்த நேரத்தில் தமிழ் மக்களை பேரணி மூலம் ஒன்றிணைந்து அதை ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிராக பிரயோகிக்க எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் தமிழர்களுக்குக் கிடைக்க இருக்கும் தீர்வு விடயத்தில் ஒற்றுமையாக இருந்து செயற்பட முன்வர வேண்டும். இப்படியான போலிப் பரப்புரைகளை நம்பி தமிழர்கள் வீதிகளில் இறங்க வேண்டாம். இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஜெனிவா கூட்டத் தொடர் முடியும் வரை தமிழ் மக்கள் எந்தக் கூட்டங்களிலோ, ஆர்ப்பாட்டங்களிலோ, பேரணிகளிலோ கலந்து கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: , , ,

Leave a Reply