சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் முவர் புறக்கணிக்கப்பட்டு அரசியல் சார்ந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
‘சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளராக விஷேட ஆளணி சேர்ப்புக்குள் வாங்கப்பட்ட கல்வி நிருவகாக சேவை iii தரத்திளைச் சேர்ந்த ஒருவர் சேவைப் பிரமாணங்களுக்கும் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கும் முரணாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடயத்தில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வெளிப்படைத்தன்மையாக நியமிப்பை மேற்கொள்ளவில்லை.
சம்மாந்துறை கல்வி வலயத்தின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு பொது ஆளணிக்குள்வாங்கப்பட்ட கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த வகுப்பு ii இல் சேவைமூப்பு, தகுதி அடிப்படையில் சிரேஷ்ட அதிகாரிகள் முவர் விண்ணப்பித்த போதிலும் அவர்களை புறக்கணித்து இலங்கை சனாநாயக சேஷலிச குடியரவர்தமானப் பத்திரிகை அதிவிஷேட 1589ஃ30 இலக்கமிடப்பட்டதும் நியமிப்பு தொடர்பான நிபந்தனைகள் மற்றும் அத்தியாயம் iஎ இன் (34) பிரிவுகளுக்கு முரணாக நியமிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் ஆற்றல், பொருத்தம், அனுபவங்கள் மற்றும் தகைமைகள் கருத்தில் கொள்ளப்படாமல் அரசியல் ரீதியான நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்தில் நிருவாக அதிகாரிகள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களின் நியமிப்புகள் சனநாயக அரசு ஒன்றின் நல்லரசாட்சி என்பது திறமையானதும் பயன் தருவதுமான நிருவாக அமைப்பு ஒன்றின் விளைவு என்பதினை கவனத்தில் கொள்ளாது அரசியலமைப்பின் உத்தரவாதப்படுத்தப்பட்ட சட்டவிதி, சட்டத்தின் முன் சமம் மற்றும் சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு என்பவற்றை கேள்விக் குறியாக்கியுள்ளது.
கல்வி நிருவகாக சேவை பிரமானக் குறிப்பின் 1225ஃ32 இலக்கமிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானியின் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத்திட்ட தரம் கருத்திற் கொள்ளப்படாததோடு கற்றபாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரையின் பொதுச் சேவையிலான நியமனங்கள், பதவியுயர்வுகள், அரசியமைப்பின் சமத்துவ ஏற்பாடுகளுடன் இணங்குவதை உறுதிப்படுத்துவதற்கு தாமதமின்றி ஓர் பொதுச்சேவை ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு பரிந்துரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் வேளை இந்நியமனமானது கிழக்கு மாகாண ஆளுநரின் பொறுப்புக் கூறல் கேள்விக் குறியாகியுள்ளது.
சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளரின் நியமனமானது சட்டவிதிகளை மதித்தல், சனநாயக சமூக மொன்றிலுள்ள மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றினை நிச்சயப்படுத்துவதை வேண்டி நிற்கிறது. நல்லரசாட்சிக்கு எந்த வடிவத்திலுள்ள பாரபட்சங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை, பாரபட்சங்கள் சட்ட விதிகளின் முடிவுகள்; படுவதற்கு தூண்டுவதுடன் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்து நிற்கின்றது என்பதை கிழக்கு மாகாண ஆளுநர் கவனத்தில் கொண்டு நியமனம் தொடர்பாக நியாயமான காரணங்களை முன்வைத்து பொறுப்புக்கூறல் வேண்டும்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















