அமலாபாலின் அன்புப் பிடியில் சிக்கிய தனுஷ்..!

dhanush-amalapaul“நான் சொல்ல வேண்டியதெல்லாம் ஒண்ணுதான், நான் நல்லவனோ கெட்டவனோ, எல்லாரையும் மாதிரி நானும் சாதாரணமானவன்தான். ஒரு மனுஷனா என் கிட்டேயும் குறைகள் இருக்கு. ஆனால், நான் என் தொழிலுக்கும், ரசிகர்களுக்கும் உண்மையானவன். விசுவாசமானவன். ஒவ்வெரு காட்சியிலேயும் என்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்ட முயற்சிக்கிறேன். மத்ததைப் பத்தி எனக்குக் கவலையில்லை. காமிராவுக்கு முன்னாடிதான் என்னுடைய சிறந்த நடிப்பைக் காட்டுவேன். காமிராவுக்கு பின்னாடி என்னைக்குமே நடிச்சதில்லை. நல்லவனோ, கெட்டவனோ, மோசமானவனோ.. நான், நானா இருக்கேன், ”

சில தினங்களுக்கு முன் தனுஷ் பண்ணிய ட்வீட் இது.

இதைப் படித்தவர்களுக்கு தனுஷ் ரொம்ப நல்லவர் போலிருக்கிறதே என்று தோன்றி இருக்கலாம்.

உண்மையில்…தனுஷ் பற்றி திரையுலகில் உலவும் செய்திகள் அத்தனை ஆரோக்யமானதாக இல்லை.

ரஜினி வீட்டு மருமகனான பிறகும் நயன்தாரா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் தனுஷ். பிறகு அந்த கிசுகிசுக்கள் அடங்கிப்போயின.

இப்போது அமலா பால் உடன் இணைத்து வரும் செய்திகளை அடங்கிவிடும் கிசுகிசுக்களாக தெரியவில்லை. அவரது குடும்ப வாழ்க்கையையே அசைத்துப்பார்க்கும் கிசுகிசுக்களாகவே தெரிகிறது.

‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலாபால். இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது தனுஷ் அமலாபால் இருவருக்கும் இடையில் ராத்திரி பகலாக கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டாக…

என் அடுத்தப் படத்தின் கதாநாயகியும் நீதான் செல்லாம்..! என்று பெரும்தொகையை அட்வான்ஸாகத் தூக்கிக் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, தினமும் அமலா பால் உடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசும் அளவுக்கு தனுஷ் மாறிவிட்டாராம்.

3 படத்தில் அமலா பாலை கதாநாயகியாக புக் பண்ணிவிட்டு, அவரது பந்தா தாங்காமல் அந்தப் படத்திலிருந்தே அவரை நீக்கியவர்தான் தனுஷ்.

அதை எல்லாம் தனுஷ் மறந்தது எப்படி?

இப்போது அமலாபாலின் அன்புப்பிடியில் சிக்கியது எப்படி?

என்று விசாரித்தால்…

மீடியாவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியைக் காட்டி அவர்களின் கைங்கர்யம் இது என்கிறார்கள்.

மேற்படி தம்பதிதான் அமலாபாலை தனுஷ் உடன் ‘சேர்த்து வைத்து’ அவர்களுக்குள் காதல் தீயை கொளுத்திப்போட்டவர்களாம்.

அதுமட்டுமல்ல, தனுஷ்- அமலாபால் இடையிலான காதல் தீயை அணையாமல் பார்த்துக் கொள்வதும் அந்த தம்பதிதானாம்.

தவறான நட்பு, நல்லவனையும் மோசமான பாதைக்கு திருப்பிவிடும்…!

இந்த மேற்கோள் இப்போது தனுஷுக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.

Tags: , , ,

Leave a Reply