இந்தியா பிரேரணைக்கு ஆதரிக்கும் ; த.தே.கூ நம்பிக்கை

indian-flagஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணைகளை கடந்த முறைபோல இம்முறையும் இந்தியா ஆதரவளிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் தமிழ் கட்சிகளின் ஆரவினை பெற்றுக் கொள்வதற்கான உத்தியோக அறிவிப்பை யாழில். இன்று வெளியிட்டது. அதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா தனிப்பிரேரணை ஒன்றை ஜெனீவாவில் கொண்டுவருவது குறித்து இதுவரை முடிவுகள் இல்லை. எனினும் கடந்த முறைகொண்டுவரப்பட்ட பிரேரணைகளை வலுப்படுத்த இறுதி நேரத்தில் இந்தியா சில தீர்மானங்களை முன்மொழிந்தது.

எனினும் இம்முறையும் அவர்கள் ஒரு பலமான தீர்மானம் கொண்டுவரவேண்டும் தமிழ் மக்களுக்கு நன்மையாக அமைய இந்தியா முன்னின்று செயல்பட வேண்டும். அதன்படி அவர்களே ஒரு பலம் வாய்ந்த பிரேரணையைக் கொண்டுவந்து தீர்மானத்தை நிறைவேற்றுவது சிறந்ததாகும். இதனையே தமிழ் நாட்டில் பலர் எதிர்பார்க்கின்றனர் அதேபோல நாமும் எதிர்பாக்கின்றோம்.

எனினும் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்னர் இந்திய தலைவர்களுடன் சந்தித்து பேசவுள்ளோம். எவ்வாறாயினும் பிரேரணைகள் வெற்றிபெறுவதற்கு ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்

Tags: , , ,

Leave a Reply