தமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக சேவையாற்றப்படும் – சல்மான் குர்ஷித்

salmanதமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக சேவையாற்றப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். வடக்கு தமிழர்களின் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தித் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இந்தியா பாடசாலைகள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நலன்புரிக்காக இந்தியா அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தையும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளையும் அமுல்படுத்த வேண்டுமென இந்தியா கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply