மன்னாரி;ல் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மலேரியா நோய் காரணமாக உயிரிழந்தவர்களது? – சுகாதார அமைச்சு

mannar_deads
மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள மலேரியா நோய் காரணமாக உயிரிழந்தவர்களது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1936 – 1938ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மலேரியா நோயினால் உயிரிழந்தவர்களது மண்டையோடுகள் மற்றும் எழும்புக்கூடுகளே இவ்வாறு பாரிய மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், 80000 பேர் வரையில் உயிரிழந்தனர் என தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் அதிகளவான மலேரியா நோயாளிகள் உயிரிழந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் செட்டிக்குளம் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.குறித்த பகுதியில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரழந்ததாகவும் இதனால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு கூட எவரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இ;ந்த மண்டையோடுகள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மண்டையோடுகள் தொடர்பில் மேலதிக விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பாரிய மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் புதைத்திருக்கலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Tags: , , ,

Leave a Reply