இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடாத்துமாறு அந்நாட்டு பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் நோக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் நேற்று ஆரம்பமான பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற இரு நாடுகளினதும் தலைவர்கள் சந்தித்து கொண்ட போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.மீனவர் பிரச்சினையானது வாழ்வாதாரப் பிரச்சினை எனவும் இது தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் 32 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தமை குறித்தும் மன்மோகன் சிங், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
















