ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது குறித்து அறிவிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இலங்கைக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். உத்தேச தீர்மானத்தின் உள்ளடக்கம் ஆராயப்பட்டதன் பின்னரே இந்தியாவின் இறுதி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















