தமிழ் இனத்திற்கு தனியான பகுதி ஒதுக்கவே முடியாது; ஜெனிவாவில் பீரிஸ் திட்டவட்டம்

peris-indiaஇலங்கையில் எந்த ஒரு இனத்துக்கும் – அது தமிழ் இனமாக இருந்தாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி- தனியான ஒரு பகுதியை ஒதுக்கவே முடியாது. அரசியல் நோக்கங்களைக் கொண்டு சில நாடுகளே இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு இன்றைய தினம் உறையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும்

யுத்தம் முடிந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய செயற்திட்டம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணையையும் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையையும் இலங்கை நிராகரிப்பதாகவும்,

இலங்கையின் வடக்கு பகுதியில் இனபாகுப்பாடு ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கவில்லை

அத்துடன் யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 75,000 முஸ்லிம்களும் 35,000 சிங்களவர்களும் வாழ்ந்ததாகவும் தற்போது கொழும்பில் சிங்களவர்கள் அல்லாத 35% மக்கள் வாழ்கின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் ஒரு இனத்திற்கென்று ஒரு பகுதியை ஒதுக்க அரசாங்கம் தயார் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையீடு செய்யவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காததால் நல்லிணக்க முனைப்புகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லை அத்துடன் அரசாங்கம் அதனை ஒருபோதும் அனுமதிக்கவில்லை,
காணாமல் போனவர்கள் குறித்தும் இழப்பீடுகள் வழங்குவது குறித்தும் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply