ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான கணினி சாட்சியை பரிசீலிக்க அனுமதி

sirani-bandaமுன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான கணினி சாட்சிகளை பரிசீலனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிட்டிய இந்த அனுமதியை அளித்துள்ளார்.

ஷிராணி பண்டாரநாயக்க சார்பில் சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த பின் சாட்சியை பரிசீலிக்க நீதவான் அனுமதி அளித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பிரதிவாதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கணினி சாட்சியை பரிசீக்க வேண்டும் என அவர் மனு ஊடாக கேட்டிருந்தார்.

அதன்படி, ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணி, கணினி நிபுணர்கள் இருவர் மற்றும் கணக்காய்வாளர் ஒருவருக்கு சாட்சியை பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

Tags: , ,

Leave a Reply