இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது – ராஜித சேனாரட்ன

rajitha-senarathneஇலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என மீன்பிடி மற்றும் கடல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொறிமுறைமையின் கீழ் பொருளாதாரத் தடை விதிப்பது கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத் தடைகளை விதிக்க பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சீனாவிற்கும் ரஸ்யாவிற்கும் வீட்டோ அதிகாரம் காணப்படுகின்றது.

எனவே இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்புக்களின் போது சீனாவும் ரஸ்யாவும் அதனை எதிர்த்து வாக்களிக்கும் என அவர் தெரிவித்துளளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நிராகரிக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply