மற்றுமொரு தொகுதி இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

fishermanஅத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட மற்றுமொரு தொகுதி மீனவர்களை கைது செய்துள்ளதாக இலங்கைக் கடற்படையினர் அறிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஏற்கனவே 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட பதினைந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார்.மன்னார் பிரதேசத்தில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்கள் பயன்படுத்திய மூன்று படகுகளையும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply