பளையில் கோர விபத்து : 8 பேர் படுகாயம்

Accident-murikandyபளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 7.30 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைக்குள் உட்பிரவேசித்ததால் இரண்டு கடைகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

மேலும் வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பளை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

Tags: , ,

Leave a Reply