உனக்கா? எனக்கா? : உக்கிரமடையும் விஜய் – தனுஷ் ‘ரீமேக்’ சண்டை!

vijay-danush-370x260தமிழில் தொடர்ந்து தோல்விப் படங்களை தந்து கொண்டிருக்கும் தனுஷுக்கு எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக மற்ற மொழிகளில் ரிலீசாகி ஹிட்டான படத்தை ரீமேக் செய்தாவது தனது மார்க்கெட்டை ஸ்டெடி செய்து கொள்ள அவர் போராடி வருகிறார்.

தனுஷ் கடைசியாக நடித்த ‘நையாண்டி’ படம் கூட ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் தான். ஆனால் அந்தப்படமும் அவருக்கு தோல்விப் படமாகத்தான் அமைந்தது. இருந்தாலும் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடித்து இழந்த மார்க்கெட்டை பெற நினைத்த தனுஷுக்கு சரியான ஆப்பை சொருகியிருக்கிறார் விஜய்.

கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி ‘உக்ரம்’ என்ற கன்னடப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஸ்ரீமுரளி ஹீரோவாகவும் ஹரிப்பிரியா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். பக்கா மசாலா கமர்ஷியல் படமால இந்தப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பிரமாதமான கலெக்‌ஷனை அள்ளிவருகிறது. இந்த ஹிட்படத்தை தான் தமிழில் ரீமேக் செய்ய விஜய்க்கும் தனுஷுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தனுஷ் இந்த படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் அசந்து போய் உடனே அந்தப்படத்தின் தயாரிப்பாளரிடம் தமிழ் ரீமேக் உரிமையை கேட்டிருக்கிறார். அவரும் ஓ.கே சொல்லியிருக்கிறார். பண பேரமெல்லாம் முடிந்த நிலையில், விஷயத்தைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய்யும் உக்ரம் தயாரிப்பாளரிடம் உரிமையை தனக்கு தருமாறு தனுஷை விட அதிக விலைக்கு பேரம் பேசியிருக்கிறார்.

பணத்துக்கு அடிபணியாக ஆள் உண்டா? என்பது போல சில கோடிகள் அதிகம் கிடைக்கிறதே என்று அந்த உரிமையை விஜய்க்கு தாரை வார்க்க தயாராகி விட்டார் உக்ரம் தயாரிப்பாளர். இதனால் தனுஷ் விஜய் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்புகிறார்கள்.

வீரியத்தை விட காரியம் தான் பெருசு. இது விஜய்க்கு தெரியாதா என்ன?

Tags: , , ,

Leave a Reply