‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்துக்கு தியேட்டர் கொடுக்கக் கூடாது! – தியேட்டர் அதிபர்களுக்கு ரகசிய எச்சரிக்கை!

vadivelu7கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் காசு வாங்கிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வடிவேலு.

தி.மு.க. தோற்று அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வடிவேலுவை திரையுலகம் ஒதுக்கி வைத்துவிட்டது.

சுமார் இரண்டு ஆண்டுகள் கழிந்தநிலையில், ஜெ-யின் கோபம் தணிந்திருக்கும் என்ற நம்பிக்கையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ’ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ என்ற படம் தொடங்கப்பட்டது.

இந்தப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இசைவெளியீடு நடைபெறவிருக்கும் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தை கோடைவிடுமறையில், அதாவது ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த தேதியில் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தது வடிவேலு.

இப்படி அவர் முடிவு செய்ய இரண்டு காரணங்கள்!

கோடைவிடுமுறை என்பதால் திரையரங்கில் கூட்டம் அலைமோதும் என்பது ஒரு காரணம்.

தேர்தல் நேரம் என்பதால், அந்த பரபரப்பில் இருக்கும் ஆளும்கட்சி நம் படத்தை வெளியிட தடையாக இருக்க மாட்டார்கள் என்பது மற்றொரு காரணம்…!

ஆனால் நடப்பதோ வேறு.

‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் விளம்பரங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டநிலையில், வடிவேலு படத்துக்கு தியேட்டர் கொடுக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து திரையரங்குகளுக்கும் ரகசிய எச்சரிகை விடப்பட்டிருக்கிறதாம்.

அப்புறமென்ன?

‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அரங்கேறவிருக்கும் நாடகங்களைக் காணத் தயாராகுங்கள்.

Tags: , ,

Leave a Reply