முஷரப் வக்கீல்களின் தலையை துண்டிப்பதாக மிரட்டல்

musharrafபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியதற்காக அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சில வக்கீல்கள் ஆஜராகி வருகிறார்கள். இந்த நிலையில் முஷரப்பின் வக்கீல்கள் நீதிமன்றத்துக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

தற்போது வழக்கு நடந்து வரும் நீதிமன்றத்தில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே வழக்கு விசாரணை நடக்கும் இடத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.

எங்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. எங்கள் தலையை துண்டித்து கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறார்கள். இதனால் நாங்களும், எங்கள் குழந்தைகளும் அச்சத்தில் உள்ளோம்.

எனவே விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. 11 பேர் இறந்தனர். இந்த நிலையில் தான் வக்கீல்கள் இந்த மனுவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply