நடிகர்களின் தாங்கள் நடிக்கும் கேரக்டர்களுக்கு மெனக்கிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறே டைரக்டர் ஹேர்ஸ்டைலை மாற்றச்சொன்னால் மாற்றுவார்கள், கோவணம் கட்டச்சொன்னால் கட்டுவார்கள். இப்படி தங்கள் கேரக்டருக்காக என்னவெல்லாமோ செய்வார்கள்.
ஆனால் ஹீரோயின்களில் இப்படி மெனக்கிடுவதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே மெனக்கிடுவார்கள். அப்படி குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிகைகளில் ஒருவர் தான் நயன் தாரா என்கிறார் நீ எங்கே என் அன்பே படத்தின் டைரக்டர் சேகர் கம்முலா.
தொழில் நேர்த்திக்கும் தொழில் பக்திக்கும் நயன்தாரா ஒரு முன்னுதாரணம். தொழில் ரீதியாக பல்வேறு போட்டிகளை சந்தித்தாலும் அவர் முன்னிலையில் இருப்பதற்கு அவரது தொழில் பக்திதான் காரணம் என்கிறார்.
தன்னுடைய கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தவும், ரசிகர்களிடம் நல்ல நடிகை என்ற நீங்கா புகழ் பெறவும் அவர் எள்ளளவும் சமரசம் செய்து கொள்வதில்லை. ‘கஹானி’ ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ நீ எங்கே என் அன்பே’ படத்துக்கு அவரை கமிட் செய்தபோது கூட அவர் ஹிந்தியில் நடித்த வித்யாபாலன் போல நடிப்பாரோ என்று சிலர் சந்தேகப்பட்டனர்.
ஆனால் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் ‘நீ எங்கே என் அன்பே’ ஒரு மைல் கல்லாக இருக்கும். என்றவர், முன்னுதாரணமாக ஒரு சில சம்பவங்களையும் குறிப்பிட்டார்.
‘ஒரு முக்கியமான உணர்ச்சிகரமான காட்சியை படமாக்கி கொண்டு இருந்தோம். அப்போது தற்செயலாக அவரது கை விரல் நகங்களை கவனித்தேன். மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது. ஆனால் கேரக்டரின் படி, அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு அழகாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், நயன் தாராவிடம் நகத்தை வெட்டச் சொன்னேன்.
அவரும் சொன்னவுடன் சிரித்துக் கொண்டே போய் விட்டார். நானும் அடுத்த காட்சிக்கான கவனத்தில் இருந்தேன். சில வினாடிகளில் அவர் திரும்பிய போது பார்த்தால் அவரது நகங்கள் நறுக்க பட்டு இருந்தது. இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. ஏனென்றால் அவர் அப்படி முடியாது என்று சொல்லிவிட்டால் அவரது நகத்தை மறைத்து படம் பிடிக்க தயாராக இருந்தேன்.
இன்னொரு சம்பவத்தை பற்றியும் குறிப்பிட்டு ஆக வேண்டும். படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்காக அவருக்கு பதிலாக டூப் உபயோகிக்கலாம் என இருந்தேன். ஏனென்றால் அது சற்று அபாயகரமான காட்சியும் கூட. இதை நான்தான் செய்வேன் என்று அழுத்தமாக, ஆணித்தரமாக சொல்லி விட்டு நடித்தார். அவரது அந்த கடின உழைப்பின் பலன், அந்த காட்சி படமாக்கப்பட்ட ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. என்று ச்ச்சே… என்னாப் பொண்ணுடா இவ…? என்றூ நயன் தாராவின் தொழில் பக்தியைப் பார்த்து நெகிழ்ந்து விட்டாராம் டைரக்டர் சேகர் கம்முலா.
அது என்னமோ தெரியல. நயன்தாரான்னானே எல்லோரும் ஒரு போதைக்கு போயிடுறாங்க
















