பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்காக சில நாடுகள் இலங்iயை தண்டிக்க முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பயங்கரவாதம் இ;ல்லாதொழிக்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட்டமையை சில நாடுகள் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். மிகக் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை இழக்கத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















