இன்றுமுதல் என்று பேப்பர்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டும், தமிழ்நாடு முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் இருந்த ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது ‘நிமிர்ந்து நில்’. ரசிகர்களும் ஆசையோடு தியேட்டருக்கு படையெடுத்த போது அங்கே நிமிர்ந்து நில் படம் ரிலீஸ் இல்லை என்ற தகவல் வந்தது. இதனால் அவர்கள் திரும்பிச் சென்றனர். தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்தப்படம் இன்று ரிலீசாகவில்லை.
இதற்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன் இப்படி ஒரு சிக்கலில் மாட்டக்கூடிய ஆள் இல்லை. ஏற்கனவே நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான். அப்படி இருந்தும் கூட நிமிர்ந்து நில் படம் ரிலீஸ் ஆகாமல் போனதுக்கு காரணம், சொன்ன பட்ஜெட்டை விட படத்துக்கு கூடுதல் செலவாகி விட்டது. ஆனால் வரவோ செலவான கோடிகளை விட குறைவாகத்தான் வந்தது.
அந்த வகையில் படத்தின் தயாரிப்புச் செலவு 20 கோடி என்றும் இதில் படத்தின் டிஸ்ட்ரிபியூஷன் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த தொகை வெறும் 17 கோடி தானாம். வட ஆற்காடு ஏரியாவில் உரிமையை வாங்கிய மன்னன் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையை கொடுத்ததோடு நின்று விட்டார்கள். அதேபோல திருச்சி விநியோகஸ்தர் ஒருவர் 40 லட்சம் ரூபாயை அட்வான்ஸாக கொடுத்ததோடு விட்டு விட்டாராம். இதனால் சுமார் 3 கோடி ரூபாய் பண இழப்போடு படத்தை ரிலீஸ் செய்வதா? என்று பயந்து போன தயாரிப்பாளர் சீனிவாசன் விநியோகஸ்தர்களிடம் பேசியபடி பணத்தை தந்தால் படப்பெட்டியை தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் பிசினஸ் பேசிவிட்டுப்போன விநியோகஸ்தர்களோ நேற்று மாலை வரை பணத்தை கொண்டு வரவில்லை.
கடைசி நேரத்தில் படத்த்தை ரிலீஸ் செய்ய தன்னிடமும் பணம் இல்லாததால் என்ன செய்வதென்றே தெரியாத தயாரிப்பாளர் சீனிவாசன் வேறு வழியே இல்லாமல் தான் நிமிர்ந்து நில் படத்தை நிறுத்தி வைத்து விட்டாராம்.
என்றாலும் விநியோகஸ்தர்கள் தரப்பில் சிலர் வந்து தயாரிப்பாளருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் நாளைக்குள் படம் ரிலீசாகி விடும் என்று தெரிகிறது
















