விசாரணையில் மாற்றமில்லை ; பிரித்தானியா மீண்டும் வலியுறுத்து

uk_flagஇலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றம் இல்லை என பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து வெளிவரும் செய்திதாள் ஒன்றுக்கு பிரித்தானிய அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் வழங்கியுள்ள செவ்வியிலேயே தமது அரசாங்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோரும் என்று வலியுறுத்தியுள்ளார்

மேலும் அவர் தெரிவித்ததாவது,

போர்க்குற்றம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை கோரப்படவுள்ளது.

மேலும் இலங்கை மீதான விசாரணைக்காக பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோரவில்லை என்று தமிழ் தரப்புக்கள் குற்றம் சுமத்திவருகின்ற நிலையிலேயே பிரித்தானியா தமது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply