அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்கா அதி நவீன தொழில்நுட்ப சாதனங்களை தருவித்தள்ளதாக வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமே இவ்வாறு அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சாதனங்களை தருவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதி நவீன கமராக்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் போன்றன இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் சேகரிக்கும் நோக்கில் இவ்வாறு சாதனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
லத்தீன் அமெரிக்காவில் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டி வி;ட்டதனைப் போன்றே இங்கும், மக்களை தூண்ட அமெரிக்கா முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதே குறித்த சக்திகளின் பிரதான இலக்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















