இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில், தொடர் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன. பிரதான அமர்வுக்கு புறம்பாக இந்தப்பக்க அமர்வுகள் இன்று நடை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைபு, மற்றும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயம் நோக்கில் இந்த பக்க அமர்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
தீர்மான வரைவுக் கலந்துரையாடல்
அமெரிக்கா தலைமையில் தீர்மானத்தை முன்வைத்துள்ள நாடுகளால், மற்றொரு முறை சாராக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஜெனிவா மனித உரிமைகள் சபையின், எட்டாவது இலக்க அறையில் ஜெனிவாநேரப்படி இன்று பி.ப 2.30 மணி தொடக் கம், 4.30 மணி வரை இந்தக் கலந்துரையாடல் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல் கலந்துரையாடல்
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விடயங்கள் தொடர்பில் ஆராயவென விசேட கலந் துரையாடல் ஒன்று இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எல்லா வகையான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான அனைத்துலக அமைப்பினால் இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் என்ற தலைப்பில் பி.ப 3.30 மணி தொடக்கம், பி.ப. 5.30 மணி வரை 24 ஆவது அறையில் இந்தக் கலந்துரையாடல் நடக்கவுள்ளது.
நடந்தேறிய கலந்துரையாடல்
இதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், மொன்ரனிக்ரோ, மொறிசியஸ், மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பில், கடந்த வெள்ளிக்கிழமை பகிரங்க முறைசாரா விவாதம் நடத்தப் பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் பல்வேறு அனைத்துலக அமைப்புகளும் கலந்து கொண்டிருந்தன. தீர்மான வரைவில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியுள்ளதாகத் தெரியவருகிறது.
கனடா, பிரிட்டன், மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாதிட்டுள்ளன. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளன.
போர் முடிந்து நான்கரை ஆண்டுகளாகியும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப் புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசு எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்று தீர்மானத்துக்கு ஆதரவான நாடுகள் தெரிவித்தன.
ஆனால், இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பாகிஸ் தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வாதிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா மெளனம்
ஆனால், இந்த கலந்துரையாட லில் இந்தியத் தரப்பில் கீழ் நிலை அதிகாரி ஒருவரே பங்கேற்றிருந்தார் என்றும் அவர், அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை எனவும் தெரியவருகிறது.
வெள்ளிக்கிழமை நடந்த கலந்துரையாடலில்,பாகிஸ்தானும் கியூபாவும் மட்டுமே, இலங்கைக்கு ஆதரவாக கருத்து களை வெளியிட்டதாகவும் ரஷ்யாவும், சீனாவும், ஓரளவுக்கே இலங்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததாகவும் ஏனைய பெரும்பாலான நாடுகள் இலங்கை தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரியவருகிறது.
















