ஜனாதிபதி இலங்கையை போதைப்பொருள் விநியோகத்தின் மத்திய நிலையமாக மாற்றி கோடிக்கணக்கில் வருமான மீட்டி வருகின்றார்: ஐ.தே.க.

ranil-rajapakஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையை போதைப்பொருள் விநியோகத்தின் மத்திய நிலையமாக மாற்றி பல கோடிக்கணக்கில் வருமான மீட்டி வருகின்றார். மேலும் பிரித்தானியர் உட்பட இந்நாட்டை ஆட்சி செய்தவர்களினால் போதைப்பொருள் விநியோகத்திலிருந்து இலங்கையை காப்பாற்ற முடியுமாயின் மஹிந்த ராஜபக்ஷவினால் ஏன் முடியவில்லை என எதிர்க்கட்சி தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.

அத்துடன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில் குறித்த பிரேரணையை விவாதத்திற்கு விடாமல் எதிர்க்கட்சியினருடைய வாயை அரசு மூடிவிடப்பார்க்கிறது. எவ்வாறாயினும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகிப்பதற்கான தடை விதிக்கும் அரசாங்கமொன்றை உருவாக்கும் வரை எங்களுடைய போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சர்தேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இராஜகிரிய ????? மண்டபத்தில் ஐக்கிய மகளிர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் இவர் மேலும் கருத்து தெரிக்கையில்:-
கடந்து சென்ற சில காலங்களில் ஏகாதிபத்திய போக்குடன் ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக் ஷ ரெஜிமண்ட் இலங்கையை போதைப்பொருள் மத்திய நிலையமாக மாற்றியுள்ளார். தற்போது போதைப்பொருள் விற்பனைக்கு உலக சந்தையில் அமெரிக்க டொலர் 80 பில்லியன் ரூபா வருமானம் எட்ட முடியும். இதற்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இப்போதைப்பொருள் விற்பனையினூடாக ஒரு வருடத்துக்கு அமெரிக்கா டொலர் 1 பில்லியனாவது வருமானம் பெறவே முயற்சிக்கின்றார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கூட 36 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த ஹெரோயின் ஹென்டயினர் சுங்கப்பிரிவினரிடம் சிக்கிக்கொண்டது. தற்போது சுங்க திணைக்களத்தில் பணி புரிபவர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக குறித்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் அரசு மறுத்து வருகின்றது. இவ்வரசினால் ஏற்பட்டுள்ள பிரச்சினையாக கருதப்படுகின்ற போதைப்பொருட்களை உள்ளடக்கிய கண்டெயினர்களை அதிகாரிகள் கைது செய்வதினூடாக குறித்த சுங்கப்பிரிவின் அதிகாரிகளின் தொழிலுக்கு பாரியளவில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் ஹெரோயின் எத்தனோல் போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான அரசுக்கெதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று சமர்ப்பித்து அதற்கான விவாதமொன்றை நடத்துமாறு கோருகின்ற போதிலும் அரசாங்கம் விவாதத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சியின் வாயை மூடப்பார்க்கின்றது. இவ்வாறு விவாதம் நடத்தினால் தமது உண்மைகள் நிரூபணமாகி விடுமென்ற அச்சம் அரசிடம் காணப்படுகின்றது.

இதேவேளை முன்னைய காலங்களில் அந்நிய செலாவணி விவசாயம் மற்றும் சுற்றுலா துறையினூடாகவே நாட்டிற்கு வருமானம் அதிகமாக கிடைக்கப்பெற்றன. இருப்பினும் தற்போது மஹிந்த ராஜபக் ஷ ரெஜிமன்ட் மக்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புதல் கசினோ சூதாட்டம் கார்ரேஸ் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தினூடாக வருமான மீட்டி வருகின்றது.

அத்துடன் இலங்கையை முன்பு ஆட்சி செய்த பிரித்தானியர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளினால் போதைப்பொருள் விநியோகம் மற்றும் கடத்தலிலிருந்து நாட்டை காப்பாற்ற முடிந்தது. இந்நிலையில் முன்னைய ஆட்சியாளர்களினால் இலங்கையை போதைப்பொருள் விநியோகத்திலிருந்து காப்பாற்ற முடியுமாயின் மஹிந்த ராஜபக் ஷவினால் ஏன் முடியவில்லை?

ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளின் போதைப்பொருள்களை மிகவும் மலிவான விலைகளில் இலங்கையில் பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறாயினும் போதைப்பொருள் விநியோகத்தை தடுக்கும் அரசாங்கமொன்றை உருவாக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

Tags: , ,

Leave a Reply